» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ரத்ததான முகாம்

திங்கள் 17, ஜூலை 2017 2:38:35 PM (IST)பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இன்று நடைபெற்ற ரத்தான முகாமில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ரத்த தான கழகம், ரோட்டரி சங்கம், யூத் ரெட் கிராஸ், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையின் ரத்தவங்கி, வைராவி குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாமை கல்லூரி முதல்வர் அழகப்பன் துவக்கி வைத்தார்.

இதில் மாணவ-மாணவிகள் பலர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் நடராஜன், சுயநிதி பிரிவு இயக்குனர் கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்க தலைவர் ரவிசங்கர், முகாம் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர்கள் வெங்கடா ஜலபதி, ரமேஷ்ராஜா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கணபதிராமன், ரோட்டரி சங்க செயலாளர் சிவசைலம், துணை ஆளுனர் சந்தானம், பேராசிரியர்கள் பாக்கியமுத்து. சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory