» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,பிஎஸ்என் பொறியியல் கல்லுாரியில் மருத்துவமுகாம்

திங்கள் 17, ஜூலை 2017 5:35:28 PM (IST)பாளை அருகே மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மருத்துவ முகாம் நடந்தது. 

இம் முகாமில்  பி.எஸ்.என் கல்விக் குழும  துணைத் தலைவர் பொறியாளர் ஜெயராம் சுயம்பு தலைமை தாங்கினார். கல்லூரி அகடமிக் டீன் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி  முதல்வர் பாலக்குமார் துவக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர்கள் டயபடிக் சிறப்பு மருத்துவர் பிரேம சந்திரன், பல் மருத்துவர் சார்லஸ் பிரேம்குமார் ஆகியோர் மாணவ , மாணவிகளிடையே உடல் நலம் பாதுகாப்பு குறித்து  சிறப்புரை ஆற்றினார். 

முகாமில் சர்க்கரை நோய், பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  இதில் 1000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் . விழாவில் கல்லூரி பேராசியர்கள் விக்னேஷ், சுரேஷ் பாபு, ஜெபாஸ்டின். ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி சேர்மன் சுயம்பு வழிகாட்டுதழின் படி பேராசிரியர்கள் ,மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory