» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா : 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

திங்கள் 17, ஜூலை 2017 5:41:31 PM (IST)அம்பாசமுத்திரம் சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா வருகிற 21ம்தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரபலமான மற்றும் பழமையான இக்கோவிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் பக்தர்கள் அதிகளவில் வந்து சங்கரலிங்கசுவாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். 

இதன் அருகிலேயே தாமிரபரணி ஆறு அமைந்திருப்பது பக்தர்களுக்கு சிறப்பான வசதியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு காணிக்கையாக வெள்ளியால் ஆன பாம்பு, தேள், கை, கால் ஆகியவற்றையும், உப்பு.மிளகு, பால் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இந்த கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதொறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் ஆடித்தபசு விழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழா வருகிற 21ம்தேதி அன்று கால்நாட்டுடன் துவங்குகிறது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வீதியுலா காட்சிகள் நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி கொடுக்கும் விழா ஆகஸ்டு மாதம் 6ம்தேதி அன்று நடக்கிறது. தாமிரபரணியாற்றின் கரையில் நடைபெறும் இந்த ஆடித்தபசு காட்சியை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை சங்கரலிங்கசுவாமி கோவில் அறங்காவலர் சங்கு.சபாபதி தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory