» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை அரசு நூலகத்தில் நூல் திறனாய்வு போட்டி

திங்கள் 17, ஜூலை 2017 5:43:36 PM (IST)செங்கோட்டை அரசு நூலகத்தில் அரசு நூலக வாசகர் வட்டம் மேலகரம் எல்.என்.சேரிட் டிரஸ்ட் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூல் திறனாய்வு போட்டி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். செயலாளர் செண்பக்குற்றாலம், எஸ்எஸ்ஏ. திட்ட பொறுப்பாளர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வாசகர் வட்ட பொருளாளர் ஐயப்பன் வரவேற்றுப் பேசினார். நிகழச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தோரணமலை யாத்திரை என்ற பயண நூல் குறித்த திறனாய் போட்டி நடந்தது. குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியை மகேஸ்வரி, செங்கோட்டை எஸ்ஆர்எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் பிச்சம்மாள், சுசிலா ஆகியோர் நடுவராக செயல்பட்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தோரணமலை யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டு போட்டியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். அதனைதொடர்ந்து நூல் குறித்த மாணவ, மாணவியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். போட்டியில் செங்கோட்டை அதன் சுற்று பகுதிகளை சேர்ந்த சுமார் நூறுக்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் நல்நூலகர் இராமசாமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory