» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுகாதாரத்தை பாதுகாக்க தவறும் அதிகாரிகள் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திங்கள் 17, ஜூலை 2017 7:04:24 PM (IST)

அம்பாசமுத்திரம் நகராட்சியில் சுகாதாரத்தை பாதுகாக்க தவறும் அதிகாரி களை களையெடுத்து விட்டு நியாயமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சியின் தலைமையிடமாக அம்பாசமுத்திரம் விளங்கி வருகிறது. அம்பாசமுத்திரத்தில் ஆர்ச் முதல் ரயில் நிலையம் வரை ஏராளமான டீக்கடைகள், ஓட்டல்கள், தெருவோர கடைகள், தின்பண்டங்கள் கடைகள் நிறைந்து இருக்கின்றன. ஆனால் இந்த கடைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் தரமானது தானா. தரமான எண்ணையில் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப் படுகிறதா என்பதை இதுவரை சுகாதார அதிகாரிகள் யாரும் சோதனை செய்து பார்த்ததில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மெயின்ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து தின்பண்டங்களை தயாரித்து விற்கும் போது வாகனங்களின் புகை அவற்றின் மீது படர்ந்து சுகாதாரத்தை கெடுக்கிறது. அது மட்டுமின்றி சாக்கடைகளில் இருந்து உற்பத்தியாகும்; கொசுக்கள், ஈக்கள் தின்பண்டங்களில் மொய்த்துக்கொண்டு நிற்கிறது. அதை விரட்டியடித்து விட்டு அந்த தின்பண்டங்களை பொது மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சுகாதார அதிகாரி என்ற பொறுப்பில் இருப்பவர்கள் கடைகளுக்கு சென்று சோதனை நடத்துவதில்லை. 

அதற்கு பதில் அவர்களின் தேவைகளை இலவசமாக பெற்று விடுகிறார்கள் என்றும் அதை கண்டிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் கண்டும் காணாததுமாக இருந்து விடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி அம்பாசமுத்திரம் நகராட்சியில் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் கடமை யை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory