» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் சிறுவர் பூங்காவில் சங்ககால ஓவியங்கள் அழிப்பு : தி.மு.க.கடும் கண்டனம்

திங்கள் 17, ஜூலை 2017 7:17:45 PM (IST)

குற்றாலம் சிறுவர் பூங்கா சுவற்றில் வரையப்பட்ட சங்க கால ஓவியங்கள் அழிக்கப்பட்டதற்கு தி.மு.க.கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்காசி ஒன்றிய தி.மு.க.செயலாளர் ராமையா (ஏ) துரை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் சீசனுக்கு பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி செல்லும் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இவற்றில் ஒன்றாக சிறுவர் பூங்கா சுற்றுச்சுவரில் சங்க கால ஓவியங்கள் வரையப்பட்டன. இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசித்தனர். மேலும் சங்ககாலத்தை இவை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி வந்தது.இந்நிலையில் சங்க கால ஓவியங்கள் திடீரென அழிக்கப்பட்டன. இதனை தி.மு.க.வன்மையாக கண்டிக்கிறது. அரசு சுவர்களிலும், அருவி பகுதிகளிலும் தேவையில்லாத விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவில்லை. இந்த விளம்பரங்கள் மூலம் தனியார் சிலர் ஆதாயம் அடைந்து வருகின்றனர். அரசுக்கு எவ்வித வருவாயும் இல்லை.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும், மெயின் அருவி பகுதியில் உள்ள விளம்பரங்களை அழித்திடவும், பூங்கா சுவரில் மீண்டும் சங்ககால ஓவியங்கள் இடம் பெறவும் மாவட்ட நிர்வாகம், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory