» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவர்கள் சுதந்திர வரலாறை தெரிந்து கொள்வது அவசியம் : டிஆர்ஓ., பேச்சு

திங்கள் 17, ஜூலை 2017 8:18:13 PM (IST)திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் வீரவாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா இன்று ஜூலை (17 ம் தேதி) கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டு, வீரவாஞ்சிநாதன்  திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த வாஞ்சிநாதன் நாட்டின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை துறந்தவர். 

கடந்த ஆண்டைப்போல இவ்வாண்டும் வீரவாஞ்சிநாதன் பிறந்த நாள் விழா தியாகிகள் தினத்தினை முன்னிட்டு, இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலலம் வரலாறுகளை அறிந்து கொள்ளமுடியும். 

மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் சுதந்திர வரலாறுகளை தெரிந்து கொள்வதுடன் கல்வியிலும் சிறந்து விளங்கி, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்த்திட வேண்டுமென பேசினார்.இவ்விழாவில், எஸ்.எம்.சி.எஸ். செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளி, சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், தென்காசி கோட்டாட்சியர் ராஜேந்திரன், செங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், செங்கோட்டை வட்டாட்சியர் மோகன், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை,  நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஜீவா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory