» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நிலவேம்பு கசாயம் குடித்தால் தங்கம் : டெங்குவை தடுக்க அதிமுக பிரமுகரின் அடடே முயற்சி

செவ்வாய் 8, ஆகஸ்ட் 2017 8:03:08 PM (IST)நிலவேம்பு கசாயம் குடித்தால் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அ.தி.மு.க பிரமுகர் அதிரடியாக அறிவித்துள்ளார். சில்வர் குடம் உள்ளிட்ட ஆறுதல் பரிசுகளையும் வழங்குவதாக அறிவித்திருப்பது பொதுமக்களை ஆர்வம் கொள்ள வைத்துள்ளது.

நெல்லை அ.தி.மு.க பிரமுகரான தங்கதுரை டெங்கு பாதிப்பிலிருந்து மீளும் வகையில் நிலவேம்பு கசாயத்தைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கம் பரிசாக வழங்க உள்ளார். பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதுடன், அதைக் குடித்துப் பயன் அடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில்,குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டவர் தங்கதுரை என்பது குறிப்பிடத்தக்கது.

பழக்கடை வியாபாரம் செய்து வரும் அவருக்கு அப்பகுதி மக்களிடம் நல்ல நெருக்கம் உள்ளது. மக்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் அவர்களின் தேவைகளுக்காக அதிகாரிகளைச் சந்திப்பது, குடிநீர்த் தேவைகளைத் தீர்த்து வைக்க குரல் கொடுப்பது எனப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள கொக்கிரகுளம், குறுந்துடையார்புரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால், இந்தப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில், வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நிலவேம்பு கசாயம் விநியோகிக்கும் முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதில், தினமும் கசாயம் குடிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory