» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தலையணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி : சோகத்தில் பெற்றோர்கள்

ஞாயிறு 13, ஆகஸ்ட் 2017 6:55:45 PM (IST)

தலையணையில் குளிக்கும்போது மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் தினேஷ் (19). ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இன்று தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சையத் ஜாபர், மாதேஸ் உட்பட 5 பேர் தென்காசிக்கு வந்தனர். இன்று மதியம் பாபநாசத்திற்கு சென்று தலையணையில் குளித்துள்ளார். ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ், கரை திரும்ப முடியாமல், அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்துவந்த வந்த வி.கே.புரம் காவல்துறையினர், சேரன்மகாதேவி கோட்ட தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காணாமல் போன தினேஷின் உடலை மீட்டனர். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. தினேஷ் இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் அவரது உடலை பெற அம்பைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory