» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேன் மோதி விபத்து : பெண் சப் இன்ஸ்பெக்டர் பலி

வியாழன் 7, செப்டம்பர் 2017 11:33:23 AM (IST)

நாரணம்மாள்புரத்தில் வேன் மோதியதில் பெண் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி அருகே தாழையூத்து காவல்நிலையத்தில் சப் இன்ஸ் பெக்டராக இருப்பவர் அனிதா.இந்நிலையில் நெல்லை மாவட்டம் நாராணாமாள்புரம் நான்கு வழி சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.இது குறித்து தகவலறிந்து அங்கு சென்று அனிதா உள்ளிட்ட போலீசார் மீட்பு பணிகளை செய்துள்ளனர்.

இதில் போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்த அனிதா மீது மதுரையி லிருந்து நாகர் கோவிலுக்கு பழம் ஏற்றி சென்ற வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அனிதா உயிரிழந்தார்.அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory