» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஈபிஎஸ்,ஓபிஎஸ், சசிகலாவை ஜெ.,ஆன்மா பழி வாங்கிவிட்டது : நடிகர் ராதாரவி பேச்சு

ஞாயிறு 10, செப்டம்பர் 2017 7:15:22 PM (IST)
எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் சசிகலா ஆகியோரை மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா பழி வாங்கி விட்டதாக நடிகரும் திமுக உறுப்பின ருமான ராதாரவி நெல்லையில் பேசினார்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர் திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 94வது நாள் பிறந்தநாள் விழா,முரசொலியின் 75வது ஆண்டு விழா,செயலற்ற தமிழக அரசின் அவல நிலையை விவரிக்கும் விழா ஆகியவை சங்கர் நகர்,தாழை பஜாரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட நடிகரும் திமுக உறுப்பினருமான ராதாரவி  பேசும் போது,முஸ்லிம்களுக்கு எதிரானது பாஜக.தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க அரை நுாற்றாண்டாகும்.கர்நாடகாவிலும் ஊழல் நடப்பது சிறையிலிருந்து வெளியே சென்று வந்த சசிகலாவால் தெரிய வந்துள்ளது. தமிழக முதல்வர் ஈபிஎஸ் டெல்லியினை சுற்றி பார்க்கிறார்.பிரதமர் மோடி வெளிநாட்டை சுற்றி பார்க்கிறார்.மொத்தத்தில் தமிழகத்தினை யாரும் கண்டு கொள்ளவில்லை.

முதலில் பாஜக அதிமுகவை காலி பண்ணி விட்டது.தற்போது திமுக வை அழிக்க துடிக்கிறது.ஆனால் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ள வரை திமுக வை அழிக்க முடியாது.முதலில் பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதிக்கு சென்றார்.பதவி போனது,சசிகலா சமாதிக்கு சென்ற போது சிறைக்கு சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.கட்சியின் சின்னம் போனது.ஆக மொத்தத்தில் மூன்று பேரையும் மறைந்த ஜெயலலிதா வின் ஆன்மா பழி வாங்கி விட்டது.

நடிகர்கள் ரஜினி,கமல் கட்சி ஆரம்பிக்கலாமா என யோசிக்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு காெடி கிடைக்கவில்லை. ஏனெனில் திராவிடக் கொடி வலிமையாக பறக்கிறது.திமுக பல தடைகளை தாண்டி வந்த கட்சி.இது பாஜகவுக்கு எப்படி தெரியும் ? இக்கட்சிக்காக ஸ்டாலின் இரவு பகல் பார்க்காமல்,துாங்காமல் உழைக்கிறார்.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர். நீட் தேர்வினால் வெளி மாநிலத்தவர்ளே அதிகம் தேர்வு பெறுகிறார்கள். ஜிஎஸ்டி வருவாய் அனைத்தும் மத்திய அரசுக்கே செல்கிறது. ஆக மருத்துவத்திற்கும், நிதிக்கும் நாம் மத்திய அரசிடம் கையேந்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

பொதுஜனம்Sep 11, 2017 - 05:05:27 PM | Posted IP 59.90*****

உண்மை கசக்கத்தான் செய்யும் .

சாமிSep 10, 2017 - 07:18:48 PM | Posted IP 59.93*****

தண்ணிவண்டி - தள்ளாடத்தான் செய்யும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory