» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் : பெண்கள் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 12, செப்டம்பர் 2017 3:41:34 PM (IST)

அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 544 அங்கன்வாடி பணியாளர், 95 குறு அங்கன்வாடி பணியாளர், 475 அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி நகர்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தேர்வு நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலககத்திலும் நேர்முகத்தோவு நடைபெற்றது. இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுவுள்ளதாகவும், தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதி இல்லதாவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும், இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோட்டார் பைக்கும் அரசு பேருந்தும் மோதி விபத்து : இருவர் படுகாயம்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 11:36:03 AM (IST)

தென்காசி – கொல்லம் ரயில் இயக்க நடவடிக்கை : கேரள எம்.பி. பிரேமசந்திரன் தகவல்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 10:43:33 AM (IST)

புளியரை அரசு பள்ளியில் உலக புத்தக தினவிழா
வெள்ளி 20, ஏப்ரல் 2018 10:35:55 AM (IST)

நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக பணிகள் : மாவட்டஆட்சியர் ஆய்வு
வியாழன் 19, ஏப்ரல் 2018 6:33:02 PM (IST)

திமுக வினர் எச்.ராஜா படத்தை எரித்து ஆர்ப்பாட்டம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 6:14:51 PM (IST)

மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் : சுரண்டையில் பரபரப்பு
வியாழன் 19, ஏப்ரல் 2018 5:42:37 PM (IST)

JEYASEELISep 13, 2017 - 02:22:42 PM | Posted IP 88.20*****