» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மண்வள அட்டை பெற்று கூடுதல் மகசூல் பெறலாம் ஆட்சியர் அழைப்பு

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 8:46:16 PM (IST)

தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண்வள அட்டையைப் பெற்று கூடுதல் மகசூல் பெற, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, 2011- 2012 ஆம் ஆண்டுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.புவியியல் விவரங்களுடன் கூடிய (இறவை பரப்பில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மாதிரி மற்றும் மானாவாரி பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மாதிரி) மண் மாதிரிகள் சேகரித்து, ஆய்வுக்குள் படுத்தப்பட்டு அதனடிப்படையில் பயிருக்கேற்ற உரப்பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப் படுகிறது. எனவே, மண் வள அட்டையை விவசாயிகள் பெற்று, அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களை பயன்படுத்தி கூடுதல் மகசூல் மற்றும் வருமானம் பெற்று பயனடையலாம் என அறிவுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory