» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் கடை திறக்க பாெதுமக்கள் எதிர்ப்பு

புதன் 13, செப்டம்பர் 2017 10:26:30 AM (IST)

பேட்டை காயிதேமில்லத் சாலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி பேட்டையில் காயிதேமில்லத் சாலையில் உள்ள ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள் வந்து செல்கிறார்கள். இதன் அருகே அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவின்பேரில் அடைக்கப்பட்டதால் பயணி களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரங்களில் தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட கடையை உடனே மூடு வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory