» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மழையால் உயர்ந்தது நெல்லை அணைகள் நீர்மட்டம்

புதன் 13, செப்டம்பர் 2017 10:27:44 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால்  கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2 நாள்களில் 8 அடியும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாகப் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது.நேற்று (செவ்வாய்) காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 7 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 3 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., அடவிநயினார் அணையில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 14 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 609.49 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 64 கனஅடி, கடனாநதி அணைக்கு 50 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 111 கனஅடி, அடவிநயினார், ராமநதி அணைகளுக்கு தலா 10 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 5 கனஅடி நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 71.15 அடியாக இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக 504.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம்  57.87 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 நாள்களில் 2 அடி உயர்ந்து 36.20 அடியாக இருந்தது.கடனாநதி அணை நீர்மட்டம் 59 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 2 நாளில் 8 அடி உயர்ந்து 45.28 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 5.63 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 17 அடியாக இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory