» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீட் தேர்வு மோடி அரசின் ஏமாற்று வேலை: கீதாஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

புதன் 13, செப்டம்பர் 2017 11:34:25 AM (IST)நீட் தேர்வு மோடி அரசின் ஏமாற்று வேலை என கீதாஜீவன் எம்எல்ஏ குற்றம்சாட்டினார். 

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "நீட்" தேர்வுக்கு எதிராக கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நிர்வாகிகள் ராஜ்மோகன் செல்வின், பிரதீப், கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், பாலசுப்பிரமணியன், கீதா முருகேசன், கணேசன், ஜீவன்ஜேக்கப், சுரேஷ்குமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  கீதாஜீவன் எம்எல்ஏ பேசியதாவது: ஏழை மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சியினரும் ஒன்று திரண்டுள்ளனர். மாணவ சமுதாயத்தினர் மத்தியில் நீட் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு மூலம் 3,426 பேர் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 முடித்தவர்கள் அல்ல. ஏற்கனவே நீட் தேர்வுக்காக தனியாக பயிற்சி பெற்றவர்கள். இது மோடி அரசின் ஏமாற்று வேலை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.  

ஆர்ப்பாட்டத்தில்  திமுக தோழமைக் கட்சிகளான தி.க. சார்பில் பெரியார் அடியான், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன், நிர்வாகிள் டேவிட் பிரபாகரன், சேகர், கோபால், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, நிர்வாகிகள் முகமது அசாருதீன், திரேஸ்புரம் மீராசா, சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூணன், நிர்வாகிகள் ராஜா, ரசல், சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், ஞானசேகரன், சமக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் கண்டிவேல், சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் டக்ளஸ், ஆதி தமிழர் பேரவை, பெருந்தமிழர் மக்கள் கட்சி, உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து

தமிழன்Sep 13, 2017 - 02:23:38 PM | Posted IP 180.2*****

நீட் தேர்வினால் தூத்துக்குடியில் உள்ள பள்ளியின் காவலாளியின் மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது....தயவுசெய்து உங்கள் அரசியல் லாபத்திற்காக நீட்டை எதிர்க்காதீர்கள், ஏழை மாணவர்களும் மருத்துவம் பயில நீட் அவசியம் ... இது எனது தாழ்மையான வேண்டுகோள்

உண்மைSep 13, 2017 - 01:55:48 PM | Posted IP 122.1*****

அனையப்போற ஊதுபத்தி!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory