» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கையில் திருவோடு ஏந்தி விஏஓ.,க்கள் போராட்டம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு

புதன் 13, செப்டம்பர் 2017 1:26:05 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,காப்பீட்டு திட்டத்தில் மாற்றங்கள் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் கடந்த 7 ம் தேதி முதல் அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.இதில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாய் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்  காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.கையில் திருவாேடு ஏந்தியும்,கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும் போராட்டம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்களோடு,தொழிலாளர்நலத்துறை ஊழியர்கள், தனியார் கல்லுாரி ஆசிரியர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இப் பாேராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில் எங்கள் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள், அரசாங்கம் செவி சாய்க்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory