» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மரணக்கிடங்குகளாக காட்சியளிக்கும் நெடுஞ்சாலைகள் : சுப.உதயகுமாரன் கண்டனம்

புதன் 13, செப்டம்பர் 2017 1:56:23 PM (IST)

நமது நெடுஞ்சாலைகள் திறந்தவெளி மரணக்கிடங்குகளாக காட்சியளி க்கின்றன என கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப உதயகுமாரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,நூறு ரூபாய் முதல் நூற்றைம்பது ரூபாய் வரை சுங்க வரி பிரிக்கும் வட இந்திய நிறுவனங்கள் சாலைப் பிரச்சினை களைக் கையாள வேண்டாமா? ஒரு முறை போடப்பட்ட சாலைக்கு ஆண்டாண்டு காலமாக காசு பிரிக் கிறார்களே? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சாலைகளை மேம் படுத்தும், பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை, பொறுப்பு இவர்களுக்கு இல்லையா? தமிழகச் சாலைகள் சமநிரப்பற்றவையாக, அலைபாய்ந்து கிடக்கின்றன. சாலையில் பயணம் செய்யும்போது, ஏதோ கடலில் படகு விடுவது போன்ற உணர்வே எழுகிறது. மழை நேரத்தில் ஏராளமான தண்ணீர் கட்டிக்கிடக்கும் பகுதிகளில் தெரியாமல் நுழைந்தால் விபத்து நடப்பது உறுதி.

இருட்டான வளைந்து செல்லும் சாலைகளில் தெருவிளக்குகளை இவர்கள் அமைப்பதில்லை. வளைவான சாலை என்கிற முன்னெச்சரிக்கை அறிவிப்பை எங்கேயும் பார்க்க முடியவில்லை. வளைந்தும், நெளிந்து செல்லும் சாலைகளில் பல இடங்களில் பிரதிபலிப்பான்கள்கூட இருப்பதில்லை.எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் நமது கண்களில் படாமல் இருப்பதற்காக சாலையின் நடுவே செடிகள், மரங்கள் வளர்க்க வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான இடங்களில் எதுவும் நடப்படவில்லை. இதுவும் பல விபத்துக்களுக்கு காரணமாகிறது.

நெடுஞ்சாலைகளில் குறுக்கிடும் சந்திப்புக்களில் பாலங்கள் கட்டாமல், இரும்பு போலீஸ் தடுப்புக்களை வைத்திருக்கிறார்கள். நிறையத் தடுப்புக்களில் பிரதிபலிப்பான்கள்கூட இருப்பதில்லை. வேகமாக வரும் வாகனங்கள், வெளியூர் ஓட்டுனர்கள் இந்த திடீர் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன்னரே பெரும் விபத்துக்கள் நடந்துவிடுகின்றன. 

நெடுஞ்சாலைகளிலிருந்து ஊர்களுக்குப் பிரிந்து செல்லும் பாதைகள் சுமூகமானவையாக இருப்பதில்லை. திடீரென வெட்டித்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. சாலைகள் எங்கும் அரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்களும் விளம்பரங்கள் எழுதிப்போட்டு வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். சாலைகளில் மாடுகள் நடமாடுவது, படுத்துக்கிடப்பது போன்ற ஆபத்துக்களும் நிறைந்திருக்கின்றன. 

பல சுங்கச் சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை. பணம் பிரிக்கும் உரிமம் பெற்றவர்கள் இவை எதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. "வர்களுக்கு பணம், நமக்கு பிணம் எனும் நிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது.தனியார்மயமாக்கப்பட்டுவிட்ட நெடுஞ்சாலைகள் பக்கம் அரசுத் துறைகள் மறந்தும் வருவதில்லை. நெடுஞ் சாலைகளில் எந்தப் பகுதியிலும் வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) குறிப்பிடப் படவில்லை. வேக வரம்பை மீறுபவர்களை காவல்துறை கண்டுகொள் வதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை யாரும் பிடிப்பதில்லை.

மொத்தத்தில் நமது நெடுஞ்சாலைகள் திறந்தவெளி மரணக்கிடங்குகளாக காட்சியளிக்கின்றன. வலுத்தவர்கள் பணம் பண்ணுகிறார்கள், இளைத் தவர்கள் பிணம் எண்ணுகிறார்கள் எனும் நிலை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.தமிழக அரசியல் கட்சிகள் மேற்கூறிய ஏற்பாடுகளை செய்வதற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் சுங்கச் சாவடி உரிமம் எடுத்திருக்கும் நிறுவனங்களை கேள்வி கேட்டாக வேண்டும், இவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்ததாக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory