» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இறகுப் பந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் வெற்றி

புதன் 13, செப்டம்பர் 2017 2:05:08 PM (IST)
நெல்லையில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை விங்ஸ் உள் விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் மூத்தோர் பிரிவிற்கான இறகுப் பந்துப் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நவீன் வெற்றி பெற்றார். 

இவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர் நவீனை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

saravananSep 22, 2017 - 04:19:46 PM | Posted IP 117.2*****

very good Naveen

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory