» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதன் 13, செப்டம்பர் 2017 5:44:16 PM (IST)
தென்காசியில் நீட் தேர்வினை ரத்துசெய்யக் கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தென்காசியில் தி.மு.க.தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். 

காங்., மாவட்டத் தலைவர் பழனி நாடார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் செய்யது மசூது, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டத் தலைவர் டேனியல் அருள்சிங், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் சங்கரி, இந்திய கம்யூ., மாவட்டசெயலாளர் போஸ், தி.க. மாவட்ட செயலாளர் டேனியல் செல்லத்துரை, ஆதி தமிழர் பேரவை மாட்ட செயலாளர் எழில்கண்ணன், ம.ம.க.மாவட்ட செயலாளர் நாகூர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தென்காசி நகர தி.மு.க. செயலாளர் சாதிர் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில சிறுபான்மை அணி துணைச்செயலாளர் ரசாக், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர்கள் அப்துர்காதர், செல்லப்பா, மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஷெரீப், மாவட்ட அவைத்தலைவர் முத்துபாண்டியன், மாவட்டத் துணைச்செயலாளர்கள் பேபிரெசவுபாத்திமா, சாமித்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் காசிதர்மம்துரை, வசந்தம்சுப்பையா, அன்புமணி, கணேசன், லிங்கராஜ், சக்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ஆறுமுகச்சாமி, கோமதிநாயகம், திவான்ஒலி, பூங்கொடி, இசக்கிபாண்டியன், சங்கர், அருள், பரமசிவன், ஒன்றியச் செயலாளர்கள் இராமையா(எ)துரை, ரவிசங்கர், செல்லத்துரை, பொன்.முத்தையாபாண்டியன், லாலா.சங்கரபாண்டியன், கடற்கரை, சேர்மத்துரை, ராஜாத்தலைவர், ஜெயபாலன், பேரூர்கழகச் செயலாளர்கள் மாரியப்பன், சுடலை, மந்திரம், முத்தையா, சண்முகவேல், சரவணன், பவுல்(எ)பால்ராஜ், புதூர்மதியழகன், வெள்ளத்துரை, வெற்றிவிநாயகம், சிதம்பரம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சரவணக்குமார், ராஜதுரை,ஹக்கீம், முத்துவேல், இலக்கிய அணிநிர்வாகிகள் காதர்அண்ணாவி, கோமதிநாயகம், அன்பழகன், நகரச்செயலாளர்கள் எஸ்எம்.ரஹீம்,இ சேகனா,செல்வக்குமார், சங்கரன், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ராம்மோகன், பால்துரை, கண்ணன், சட்டநாதன், அப்துல்காதர், உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory