» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஈபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு : ஐந்து பேர் கைது

புதன் 13, செப்டம்பர் 2017 5:53:12 PM (IST)

நெல்லையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்த தினகரன் ஆதரவாளர்கள் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவில் சசிக்கலா டிடிவி தினகரன் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நெல்லை சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மையை எரித்தனர். மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர்க்கு எதிராக கோஷமிட்டனர். 

மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் விகேபி சங்கர் தலைமையில் பாளை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வேல்பாண்டி கோபாலசமுத்திரம் தளவாய் நரசிங்கநல்லூர் வெங்கடேஷ், மாநில பேச்சாளர் இ.எம்.பாண்டி உட்பட 10க்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்தனர். அவர்களை சந்திப்பு காவல் ஆய்வாளர் உதயசூர்யன் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory