» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

புதன் 13, செப்டம்பர் 2017 6:35:30 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல் படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுதும் கடந்த 7 ம் தேதி ஜாக்டோஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் ஆர்ப்பாட்டம், போராட்டம்,சாலைமறியல் என பல கட்ட போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கை களை வலி யுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.நீதிமன்ற உத்தரவினை மீறி ஆர்ப் பாட்டம் நடத்தியதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினை சேர்ந்த சுமார் 800 பேரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory