» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துரோகிகளும்,முட்டாள்களும் உள்ள இயக்கமே அதிமுக : திண்டுக்கல் லியோனி கடும் தாக்கு

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:17:55 AM (IST)
துரோகிகளும்,முட்டாள்களும் உள்ள இயக்கமே அதிமுக என்று திருநெல்வேலி திமுக கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி கூறினார்.

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா,கருணாநிதி பிறந்தநாள் விழா,முரசொலி பவள விழாஆகிய முப்பெரும் விழா மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாளை.,எம்எல்ஏ.,மைதீன்கான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலப்பாளையம் கழக செயலாளர் அப்துல்,மாநகர மாணவரணி அமைப்பாளர் ராஜா முகமது,நெல்லை மாநகர செயலாளர் மாலைராஜா ஆகியோரும், சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டனர்.இதில் லியோனி கூறியதாவது,

திமுக., ஒரே கட்சி,ஒரே கொடியுடன் உள்ளது.ஆனால் ஆளும் அதிமுக.வில் எத்தனை அணிகள் எத்தனை கொடிகள் உள்ளதென்றே தெரியவில்லை.எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரடியாக சந்திக்க இயலாத முதல்வராக உள்ளார்.அரியலுார் மாணவி அனிதா இறந்த அன்று நானும்,திமுக நிர்வாகிகளும் கலந்து காெண்டனர்.ஆனால் அதிமுகவில் இருந்து நிர்வாகியோ,தாெண்டனோ யாரும் கலந்து கொள்ளவில்லை.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை நட்சத்திர மாகவும்,செயல்வீரராகவும் உள்ளார்.அவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்.தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக கூறி ஆனால் நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லாத அமைச்சர் ராஜேந்திர பாலாஜீ,ஆற்றுநீர் ஆவியாமல் இருக்க தெர்மகோல் போட்ட அமைச்சர் செல்லுார் ராஜூ போன்ற முட்டாள்களும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு துரோகம் செய்த ஈபிஎஸ் போன்ற துரோகிகளும், முட்டாள்களும் உள்ள இயக்கமே அதிமுக என்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும்,அவரது மறைவிற்கு பிறகு 3 மாத காலம் முதல்வராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் நடிப்பில் சிவாஜீகணேசனை மிஞ்சி விடுவார். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது அழுது கொண்டே பதவியேற்றவர், அவர் இறந்த போது அழவேயில்லை.

பிளஸ் 2வில் 840 மதிப்பெண்கள் எடுத்து திமுக தலைவர் கருணாநிதி உதவியுடன் மருத்துவபடிப்பில் சேர்ந்த பாஜகவின் தமிழிசை செளந்தி ரராஜன் தற்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவது நியாயமா? டாக்டர் கிருஷ்ணசாமி விளம்பரத்திற்காகவே நீட் தேர்வினை ஆதரிக்கிறார்.வரும் தேர்தலில் திமுக அறுதி ப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக நேற்று மாலை மேலப்பாளையத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


மக்கள் கருத்து

சாமிSep 14, 2017 - 01:44:13 PM | Posted IP 117.2*****

காவிரி - கச்சத்தீவு - முல்லைப்பெரியாறு - இலங்கைத்தமிழன் - இந்த மேட்டர்களில் திமுகவின் துரோகம் நினைவுக்கு வந்து இருக்கும் - டங்கு ஸ்லிப் ஆகி சொல்லி விட்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory