» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்த அரசு காது கேட்காத அரசாகவே இருக்கிறது : ஜாக்டோ ஜீயோ குற்றச்சாட்டு

வியாழன் 14, செப்டம்பர் 2017 11:44:35 AM (IST)




திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ அமைப்பினர் இன்று காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல் படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுதும் கடந்த 7 ம் தேதி ஜாக்டோஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோஜியோ அமைப்பினர் இன்று காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர்.நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தி கைதான நிலையில் இன்றும் போராட்டம் நடைபெறுகிறது.இது குறித்து பேசிய ஜாக்டோஜியோ அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கூறும் போது, எங்களது நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது. மேலும் இந்த அரசு காது கேட்காத அரசாக இருக்கிறது.எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். மேலும்கும்மி அடித்து பாட்டுப்பாடி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory