» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாம்புராணி கடித்து மகள் பலி தாய் உயிர் ஊசல்

வியாழன் 14, செப்டம்பர் 2017 12:58:53 PM (IST)

செங்கோட்டை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளை விஷ பாம்புராணி கடித்ததில் மகள் பரிதாபமாக இறந்தார். தாய் உயிருக்கு போராடி வருகிறார்.

செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முத்துமாரி (43), மகள் கிருஷ்ணவேணி (18). இரவு தாயும், மகளும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர். நள்ளிரவு 11 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷ பாம்புராணி கிருஷ்ணவேணியை கடித்துள்ளது. இதனால் திடுக்கிட்டு விழித் தெழுந்த கிருஷ்ணவேணி மின்விளக்கை போட்டு பார்த்துள்ளார். அப்போது விஷ பாம்புராணி தனது தாயையும் கடித்துள்ளதை அறிந்து அவர் சத்தம் போட்டுள்ளார். பாம்புராணியை அடித்துள்ளனர். இதில் அது இறந்து விட்டது. இதனையடுத்து முத்துமாரியும், கிருஷ்ணவேணியும் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். 

அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கிருஷ்ணவேணி இறந்து விட்டார் என கூறியுள்ளனர். முத்துமாரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து முத்துமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக பாளை.,அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புளியரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் வழக்கு பதிவுசெய்தார். செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory