» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் உற்சாக குளியல்

வியாழன் 14, செப்டம்பர் 2017 1:07:30 PM (IST)

குற்றாலம் பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம், செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி யில் நேற்று முன்தினம் மாலை யில் பரவலாக மழை பெய்தது. குற் றாலம் மலைப்பகுதிக்குள் இம்மழை நீடித் திருந்தது. இதன் காரணமாக குற் றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி யில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. ஐந் தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தற்போது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருப்பதால் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் எவ்வித இடை யூறும் இன்றி நீண்ட நேரம் குளிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் குற்றாலம், ஐந்தருவி பகுதியில் குளு குளு நிலைமை நீடித்து வருவதால் அது சுற்றுலாப் பயணிகளை மேலும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையில் ரகளை : போலீஸ்காரர் கைது

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:56:07 PM (IST)

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory