» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் மினி மாரத்தான் போட்டிகள் : ஆட்சியர் துவக்கி வைப்பு

வியாழன் 14, செப்டம்பர் 2017 1:50:38 PM (IST)
திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கில் சர்வதேச இளைஞர் தினத்தை யொட்டி மினி மாரத்தான் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கொடியசைத்து துவக்கி வைத்தார்

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் சார்பில், 5 கி.மீ தூரம் ஓடும் மினி மாரத்தான்போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 1000 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 

இளைஞர்களுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ்களையும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

மினி மாரத்தான் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி மாநகர ஆணையர் குடியிருப்பு, டி.ஐ.ஜி குடியிருப்பு பகுதி வழியாக திருச்செந்தூர் சாலை வரை சென்று மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்த டைந்தது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.செந்தில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.ரேவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வீரபத்ரன், மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.பொற்செல்வன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் அமலவாணன், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் அப்துல்காதர், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory