» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் சரண் : ப‌சுபதி ஆதரவாளர் சிங்காரம் கொலை வழக்கு

செவ்வாய் 10, அக்டோபர் 2017 12:19:45 PM (IST)

பசுபதி ஆதரவாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் பண்ணையார் இன்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி பசுபதிபாண்டியன் ஆதரவாளரான சிங்காரம் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக ஜீப்பில் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது சிலர் ஜீப்பை வழிமறித்து மிளகாய் கரைசலை ஊற்றி சிங்காரத்தை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இது தொடர்பாக சிலர் நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர்.அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் இவ்வழக்கில் முக்கிய தொடர்பு உள்ளதாக சுபாஷ் பண்ணையாரை போலீசார் தேடி வந்தனர்.நீண்ட நாட்களாக தலை மறைவாக இருந்த அவர்  இன்று நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory