» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாலைவன பூமியில் விவசாயம் செழிக்க செய்தவர் மோடி : பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு

புதன் 11, அக்டோபர் 2017 11:00:09 AM (IST)
பாலைவன பூமியில் விவசாயம் செழிக்க செய்தவர் பிரதமர் மோடி என நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பொன்னார் பேசினார்.

நெல்லையில் பாஜ.,சார்பில் நேற்று இரவு சுமார் 4000 பேர் மாற்று கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த திராவிட கட்சிகள் மக்களுக்கான எந்தவொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. 

இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது, மனதில் எனக்கு எழுந்த கேள்விக்கு விடைதெரிகிறது. ஊழலுக்கு மாற்றாக நல்லாட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும் பாஜ.,வில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது.

திமுக., ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே ஊழல்ஆரம்பித்து விட்டது.திமுக.,விற்கு மாற்றாக எம்.ஜி.ஆர்., தலைமையிலான அதிமுக.,வுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர்.  ஆனால் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் ஊழலை பெருக்கியதே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தொழில்வளம், கல்வி வளர்ச்சி, விவசாயம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, பிற மாநிலங்களைவிட தமிழகம் பின்தங்கியே உள்ளது. வளர்ச்சிபெறவில்லை. தமிழர்கள் ஒற்றுமையாக இருந்துவிடக் கூடாது. மத ரீதியாக, பிராந்திய ரீதியாக வேறுபாடுகளை ஏற்படுத்தி திராவிட கட்சிகள் ஆட்சி செய்தனர்.

குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி, அந்த மாநிலத்தை உலக நாடுகளிலேயே சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டினார். பாலைவன பூமியில் விவசாயம் செழிக்க செய்தார். 3 லட்சம் தடுப்பணைகளை கட்டினார். தமிழகத்தில் தாமிரபரணி, வைகை, காவிரி, என எந்த நதியிலும் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகளை திராவிட கட்சிகள் கட்டவில்லை. கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் தொழில்வளர்ச்சி பெற்றிருப்பது அந்த மாவட்ட மக்களின் சொந்த முயற்சியால் தான். ஆட்சியாளர்களால் அல்ல.மதுரை–குமரி–திரு வனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்டத்திற்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

சென்னை– தூத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரயில்பாதை அமைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்–சென்னை கடல்வழி மார்க்கமாக கப்பல் போக்குவரத்து துவங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில்  தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு தந்துள்ளது. திராவிட கட்சிகள் பெற்ற தாயை விற்று பிழைப்பது போல, ஆட்சி நடத்தி பிழைத்து வருகிறது. நீட் தேர்வு, நெடுவாசல், கெயில் திட்டம் எந்த பிரச்னையிலும் பாஜ.,மீது துளியளவு கூட தவறில்லை. எல்லாம் திமுக.,காங்.,கூட்டணி ஆட்சியின் போதுதான் கையெழுத்திடப்பட்டது.

இந்தியை எதிர்த்துவிட்டு, மறைமுகமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்தது திமுக., தனியார் பள்ளிகளில் இந்தி இல்லையா? தமிழ் சமுதாயத்தை அழிப்பதற்கு என்ன பெருமை.மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் 1,457 பஞ்.,தலைவர் பதவிகளை பாஜ.,கைப்பற்றியுள்ளது. தமிழகத்திற்கு இனி விடிவுகாலம் தான். மக்களாகிய நீங்கள் விழித்துக் கொண்டு விட்டீர்கள். . வரும் ஆட்சி பாஜ., ஆட்சியாக அமையட்டும். நம்பிக்கையோடு களம் இறங்குவோம். இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Oct 11, 2017 - 02:22:15 PM | Posted IP 117.2*****

ஆமா .. கதிர்மங்கலத்துல மீத்தேன் திட்டம் கொண்டு வந்து கொளுத்தி போட்டாரு ... பொய் பொய்யா கூறி வரும் பொறி உருண்டை ..மக்கள் இன்னும் நம்பவா போறாங்களோ ??? மீத்தேன் திட்டத்தை கையெழுத்து போட்டவர் கலப்பட தெலுங்கன் சுடாலின், அதை கொண்டு வந்தது பீசப்பி (பிஜேபி ).

உண்மைOct 11, 2017 - 01:50:34 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

unmaiOct 11, 2017 - 12:52:17 PM | Posted IP 82.19*****

puluvuni moota

MANASATCHIOct 11, 2017 - 11:32:11 AM | Posted IP 117.2*****

ஏ லூசு பயலே அவன் ஊரை தான மாத்துனான். விவசாய பூமியான என் தமிழ் நாட்டை நாசமாக்குனவன் மோடி தான நாயே. அவன் இடத்துல கெயில் திட்டம் போடு. எனக்கு அது வேண்டான்னு சொல்றேன். ஏன்டா வேண்டான்னு சொல்றவனுக்கு விஷத்தை தின்னு தின்னு னு தாரிங்க. திமுக ஆட்சியில கையெழுத்து தானே போட்டான். நீ அதை நிராகரிக்க வேண்டியது தானே. அவன் போட்டான். இப்ப நீயும் உன் ஆளு தமிழிசையும் சேர்ந்து கூத்தாடுறிங்க. ச்சீ இது ஒரு பொழப்பா. உன் வீட்ல கொண்டு வையேன் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை. உன் தாமரையும் நீங்களும் நாசமாத்தான் போவீங்க டா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory