» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த பரிதாபம்: திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திங்கள் 23, அக்டோபர் 2017 11:30:10 AM (IST)நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்டம் அச்சன்புதுார் காசிதர்மம் பகுதியினை சேர்ந்த இசக்கிமுத்து (28),சுப்புலட்சுமி (26), அட்சயபரணி (5), சரண்யா (ஒன்றரை வயது) ஆகிய 4 பேர் வந்து ள்ளனர்.அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்ணெண்ணெயை 4 பேர் மீதும் ஊற்றி தீ குளித்துள்ளனர். இதனால் அங்கு வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அங்கு வந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் ஆபத்தான நிலையில் பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து அறிந்த ஆட்சியர் சந்திப்நந்துாரி மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்தார்.. 

கந்துவட்டியால் தீக்குளித்த அவலம்

இசக்கிமுத்து சுப்புலட்சுமி தம்பதியினர் அதே பகுதியினை சேர்ந்த முத்துலட்சுமியிடம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாகவும் அதற்கு வட்டியாக மட்டும் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதைந்தாயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்கள்.ஆனால் முத்துலட்சுமி மேலும் வட்டிப்பணம் கட்ட வேண்டும் என சில பெண்களை வைத்து மிரட்டினாரம்.இது குறித்து கிட்டத்திட்ட 6 தடவைக்கு மேல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் மனமுடைந்த அவர்கள் இன்று தீ குளித்துள்ளனர்.


மக்கள் கருத்து

SaranyaOct 23, 2017 - 03:07:22 PM | Posted IP 157.5*****

How they taken photos instead of helping them!???

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory