» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கந்துவட்டி புகார் விசாரணைக்கு இசக்கிமுத்து ஆஜராகவில்லை : நெல்லை எஸ்பி விளக்கம்

செவ்வாய் 24, அக்டோபர் 2017 5:41:37 PM (IST)
புகார் மனுக்களை பெறுவதில் போலீசார் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை எஸ்பி அருண்சக்திகுமார் தெரிவித்தார்.

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று விளக்கமளித்துள்ளார். திருநெல்வேலியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் பெற்றோர்கள் இசக்கி முத்து, சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் சரண்யா, அட்சய பரணி என 4 பேர் தீக்குளித்தனர். தீக்குளித்த 4 பேரில் சுப்புலட்சுமியும் அவரது 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். 

இசக்கிமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.விசாரணையில் இசக்கி முத்துவின் உறவினர்கள் கூறுகையில், கந்துவட்டி கொடுமையால் அவர்கள் பாதிக்கப்பட்டு காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே இசக்கி முத்து குடும்பத்தினர் தீக்குளித்தனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மதியம் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது, இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதியினர் இதற்கு முன் பலரிடம் கடன் வாங்கியுள்ளனர். சமீபத்தில் தங்கள் வீட்டை கட்டுவதற்காக 85ஆயிரம் ரூபாயும், காதணி விழாவுக்காக 60 ஆயிரம் ரூபாயும் கடனாக வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகவும் வேதனைக்குள்ளாயினர். இந்நிலையில் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் இது குறித்து மனு ஒன்றை அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் இது குறித்து இசக்கி முத்துவை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினார். ஆனால் இசக்கி முத்து அங்கு இல்லை என தகவல் வந்தது. 

இதையடுத்து அந்த மனு பற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது. தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையும், காவல்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. முழு விசாரணை முடிந்த பிறகே, ஆதாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்படும். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் மனுக்களை பெறுவதில் போலீசார் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து

Hindu MunnaiOct 25, 2017 - 11:43:13 AM | Posted IP 88.20*****

This kind of department foxes should be punished

Nan manithanOct 24, 2017 - 07:39:18 PM | Posted IP 2.89.*****

Eppadi manu koduthavar illa nu solluranga. Atha eppadiyo marachindanga Ayya. Neenga nalla visaringa Sami

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory