» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் : சட்டக்கல்லுாரி மாணவி கைது

புதன் 25, அக்டோபர் 2017 11:00:44 AM (IST)நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லுாரி மாணவி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று கூலி தொழிலாளி இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.இதில் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அவரது தந்தை ஆனந்தனுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.மாணவி நந்தினி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory