» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் அலுவலத்தில் தீக்குளித்த இசக்கிமுத்து உயிரிழப்பு : நெல்லையில் பரிதாபம்

புதன் 25, அக்டோபர் 2017 1:57:34 PM (IST)
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து கந்து வட்டிக் கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், சுப்புலட்சுமியும் இரு பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பலியானதால் பெரும் சோகம் உருவாகி இருக்கிறது. 

கந்து வட்டியைக் கொடுமை காரணமாக 5 முறை மனுக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியர் மீது கண்டனம் குவிந்து வருகிறது. இந்த நிலையில், கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து சிகிச்சையில் இருந்த இசக்கிமுத்துவும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனால் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே இறந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory