» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

சனி 28, அக்டோபர் 2017 1:30:46 PM (IST)நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (54) இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் இவர் தினகரன் ஆதரவாளர் என கூறி போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கபடவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார் அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கி எறிந்தனர் .மேலும் அவரை அழைத்து முதலுதவி செய்து காவல் நிலையத்திற்கு  விசாரணைக்கு அனுப்பி வைத்தனர் ,இதனால் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory