» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி டவுணில் கொட்டித் தீர்த்த கனமழை : சாலைகளில் ஆறாக ஓடிய மழைநீர்

புதன் 1, நவம்பர் 2017 7:47:39 PM (IST)

நெல்லை டவுணில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை தொடர்வதால் சாலைகள் குளமாகியது.

இன்று காலை தொடங்கி மாலை வரை திருநெல்வேலியில் வெயில் சாதாரணமாக இருந்தது.மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ தொடங்கியது.பின்னர் 5 மணியளவில் நெல்லை டவுணில் தொடங்கிய மழை போகப்போக கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது.

இதில் டவுண்,4 ரதவீதிகள்,  சந்திவிநாயகர் கோவில் அருகில், சேரன்மகாதேவிரோடு,  சத்தியமூர்த்தி தெரு சொக்கபனை முக்கு சாலை ஆகியவை நீரில் மூழ்கின.இதில் மழைநீர் வெளியேற வழியின்றி உள்ளது.சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.தொடர்ந்து நெல்லை ஜங்ஷன் பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் மின் இனைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory