» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில்பட்டி யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்காவை இணைக்க வலியுறுத்தி வாகன பிரசாரம்

ஞாயிறு 12, நவம்பர் 2017 9:15:47 PM (IST)



கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவை இணைக்க  வலியுறுத்தி பாரதி கிசான் சங்கம் சார்பில் பைக் பிரசாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்கள் நெல்லை மாவட்டம் குருவிகுளம் யூனியனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு காலவிரயமும், அலைச்சலும் ஏற்பட்டு வருவதாகவும், யூனியனை தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் கோவில்பட்டியில் உள்ளதால் 12 வருவாய் கிராமங்களை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும், இளையரசனேந்தல் பிர்காவை திருவேங்கடம் தாலூகாவுடன் இணைக்கும் முயற்சியினை கைவிட்டு, தொடர்ந்து கோவில்பட்டி தாலூகாவில் இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பாரதி கிசான் சங்கம் சார்பில் பைக் பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு முன்னிலை வகித்தார். வாகன பிரசாரத்தினை கழுகுமலை வட்டார கம்மவார் சங்க தலைவர் ராஜேந்திரன் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன், இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்புக்குழு நிறுவனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயணியர் விடுதி முன்பு  தொடங்கிய இந்த வாகனப்பிரச்சாரம் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தங்கள் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில் திரளான பாரதிய கிசான் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

renganayagalu. sNov 13, 2017 - 12:56:36 PM | Posted IP 157.5*****

இது விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory