» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரெட்டியார்பட்டி பகுதியில் மெகா துாய்மை பணிகள் : நெல்லை ஆட்சியர் ஆய்வு

திங்கள் 13, நவம்பர் 2017 1:16:41 PM (IST)

பாளையங்கோட்டை  ரெட்டியார்பட்டி பகுதியில் நடைபெற்ற வரும் மெகா தூய்மை பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  

இதில் ரெட்டியார் பட்டி, ஜக்கம்மாள்தெரு, கீழத்தெரு, பெருமாள் சிவன்கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, முப்பிடாதிஅம்மன்கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டார். டெங்கு கொசு ஒழிப்பு பணி செய்தமைக்காக வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி பதிவு செய்யும் பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். 

காலை, மாலை இரண்டு நேரங்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கூடுதல் கொசு ஒழிப்பு புகை மருந்து கருவிகள் வாங்கிட உத்தரவிட்டார். கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் அனுமதிக்காத வீடுகளுக்கும், கொசு புழு உள்ள வீடுகளுக்கும் நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில் குமார் , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் .சக்திமுருகன், பாளையங்கோ ட்டை வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory