» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழாய் பதிக்காமலேயே குடிநீர் எப்படி வழங்க முடியும்? மாநகராட்சி அறிவிப்புக்கு கீதாஜீவன் கண்டனம்

திங்கள் 13, நவம்பர் 2017 4:23:30 PM (IST)

தூத்துக்குடியில் 4வது பைப் லைன் திட்ட பணிகள் நிறைவு பெறாமல் வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்து இருப்பதற்கு கீதாஜீவன்  எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன்  எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:  தூத்துக்குடி  மாநகராட்சியில் 4வது பைப்லைன் திட்டப் பணிகள் தொடங்கி 7 ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இது தொடர்பாக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், ஆமை வேகத்தில் நடந்த பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளது. இருந்து பணிகள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. 

ஆனால், புதிய குடிநீர் இணைப்புகளுக்கு பணம் கட்டியவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள வார்டுகளில் இதுவரை தெருக்களில் பதிக்கவேண்டிய கறுப்பு குழாயோ, அல்லது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய ஊதா குழாயோ பதிக்கப்படவில்லை. அதுபோல் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டு தீர்வையில்லாமல் குடியிருந்து வருகிறார்கள். 4வது பைப்லைன் திட்டத்திற்காக பணம் கட்டி பலர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். 

பைப்லைன் பதிக்கும் பணிகள் நிறைவு பெறாமலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு 22ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் தமிழக முதல்வரை திருப்தி படுத்துவற்காக வெளியிட்ட அறிவிப்பாகவே தெரிகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், 4வது  பைப்லைன்  திட்டப்பணிகளில் பைப்லைன்களை பதித்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மீளவிட்டான், அத்திமரப்பட்டி, உள்ளிட்ட ரூரல்   பகுதிகளுக்கும், இதன் பின்பு மாநகர பகுதிகளிலுள்ள மக்களுக்கும்   வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

நன்றி ammaNov 14, 2017 - 10:57:49 AM | Posted IP 59.90*****

எனது மனுவை பரிசீலனை செய்து அணைத்து மக்களுக்காவும் தங்கள் குரல் கொடுப்பதற்கு nanri

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுNov 13, 2017 - 05:57:47 PM | Posted IP 122.1*****

3 வது வார்டு ஹவுசிங்போர்டு பகுதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மில்லர்புரம் பொன்னுசாமி நீர் தேக்க தொட்டியிலிருந்து ஒரே ஒரு பொது தெரு குழாய் வைப்பதற்கு கேட்டதற்கு அதிகாரிகள், சட்டத்தில் இடம் இல்லை இது 3 பைப்லைன் திட்ட நீர் தேக்கம், தங்களுக்கு 4 வது பைப்லைன் திட்டம் செயல்படும் போது குடி நீர் கிடைக்கும் என்று கூறிய அதிகாரிகள் தற்போது ஹவுசிங்க்போர்டு பகுதிக்கு எப்படி மில்லர்புரம் பொன்னுசாமி நீர்தேக்கதொட்டியிலிருந்து குடி நீர் வழங்க ஏற்பாடு நடக்கிறது , இப்போது மட்டும் சட்டம் இடம் கொடுக்குமா?

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுNov 13, 2017 - 05:33:27 PM | Posted IP 122.1*****

மாநகராட்சி அதிகாரிகள் முதலில் தூத்துக்குடிக்கு வரும் குடி நீர் அளவு மற்றும் எந்தந்த பைப்லைன் திட்டம் மூலம் வருகிறது , என்ற வெள்ளை அறிக்கை வெளியிட்டால் தவிர , உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை?

குலாம், ஹவுசிங்போர்டு 3 வது வார்டுNov 13, 2017 - 05:31:12 PM | Posted IP 122.1*****

3 வது வார்டு ஹவுசிங்போர்டு ஒரு பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தெரு பொது குழாய் ரூபாவதி மண்டபம் அருகில் இருக்கும் 3 வது பைப்லைன் வாட்டர்டேங்க்லிருந்து கேட்டதற்கு குடி நீர் பற்றாகுறை ஏற்படும், நீங்கள் பழைய மீளவிட்டான் பஞ்சாய்த்து பகுதி சார்ந்தவர்கள் என்று கூறிய அதிகாரிகள், தற்போது 4 வது பைப் லைன் திட்டம் நிறைவேற்றும் த்ருவாயில் , தற்போது அதே 3 பைப் லைன் வாட்டர் டேங்கிலிருந்து குடி நீர் சப்ளை செய்ய முயற்சி நடக்கிறது, இப்போது எப்படி சாத்தியபடும், உண்மையில் மக்களை முட்டாள் ஆக்குகீறார்களா? அல்லது அதிகாரிகளுக்கே வேலை தெரியவில்லையா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory