» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் போக்குவரத்து நெரிசலை குறையுங்கள் : ஆட்சியருக்கு மனு

திங்கள் 13, நவம்பர் 2017 6:36:44 PM (IST)

திருநெல்வேலியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென ஆட்சியர்க்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் ஆட்சியர் சந்திப்நந்துாரி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில் நெல்லை மீனாட்சிபுரம் லெட்சுமணன் என்பவர் ஆட்சியரிடம் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.  அந்த மனுவில் நெல்லை மாநகரப் பகுதியில் மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கத்திற்கு ஏற்றாற் போல் சாலை விரிவாக்கம் மற்றும் இணைப்பு சாலை திட்டங்கள் இல்லை. 

திருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோட்டில் செயல்படும் தனியார் ஹோட்டல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை நிறுத்த வசதி செய்து தரப்படவில்லை .வளாகத்துக்கு வரும் வாகனங்கள் குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory