» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு வாகனத்தை சேதப்படுத்திய ஆறு பேர் கைது : 21 பேருக்கு வலை

திங்கள் 13, நவம்பர் 2017 6:49:32 PM (IST)

திருநெல்வேலி அருகே அரசு அதிகாரி வாகனத்தை உடைத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் 21  பேரை தேடி வருகின்றனர்.  

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருப்பவர் சக்தி அனுபமா. இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்து விட்டு அரசுக்கு சொந்தமான ஜீப்பில் ஊருக்கு புறப்பட்டு சென்றார். ஜீப்பை டிரைவர் மாரி மகாராஜன் என்பவர் ஓட்டினார். 

ஜீப் மானூர் அருகே உள்ள வெங்கல பொட்டல் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு ஆட்டோ சென்றது. ஆட்டோவை பாளை அக்கன் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.ஆட்டோவை ஜீப் முந்தி செல்லும் போது உரசியபடி சென்றதாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் செந்தில் குமார் ஜீப்பை வழி மறித்து சக்தி அனுபமாவிடம் தகராறு செய்தார். 

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் செந்தில் குமாருக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் டிரைவர் மாரி மகாராஜனை  தாக்கினர். மேலும் அரசு வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். உடனே இது பற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார், நாஞ்சான்குளத்தை சேர்ந்த சமுத்திரம்(60), மந்திரமூர்த்தி, சங்கரநயினார்(18), செல்லையா(53), பட்டவர்த்தியை சேர்ந்த மாரிமுத்து(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 21 பேரை போலீசார் தேடி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

செவ்வாய் 16, அக்டோபர் 2018 1:41:32 PM (IST)

Sponsored Ads


Tirunelveli Business Directory