» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:11:54 AM (IST)

பாப்பாகுடி அருகேயுள்ள பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் அடைச்சாணி கீழத் தெருவில் வசித்து வருபவர் முருகன் (32).  தொழிலாளி. இவரது மனைவி கணேசம்மாள் (30) . நெல்லையில் சமையல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு,  சமையல் வேலை செய்யும் இடத்தில் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணேசம்மாள் அதே பகுதியிலுள்ள தாய் வீட் டில் வசித்து வந்தாராம்.

இந்நிலையில் கணேசம்மாள் தூண்டுதலின் பேரில் முருகனுக்கு ஒருவர் கொலை மிரட் டல் விடுத்தாராம். இதுகுறித்து  முருகன் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து கணேசம்மாள் கைது செய்யப்பட்டு  பாப்பாக்குடி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தார். ஞாயிற்றுக்கிழமை  காலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு,  தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த கணேசம்மாளை,  முருகன் அரிவாளால் வெட்டினாராம். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். முருகன் தப்பியோடிவிட்டார். 

போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்த நிலையில், பாப்பான்குளம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அவரை, காவல் ஆய்வாளர் (பொ) ஐயப்பன் தலைமையிலான போலீஸார்  கைது செய்தனர், மேலும் முருகனிடமிருந்து, அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

செவ்வாய் 16, அக்டோபர் 2018 1:41:32 PM (IST)

Sponsored Ads


Tirunelveli Business Directory