» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பயிற்சி பள்ளி நிர்வாகி மீது தாக்குதல் : ராணுவவீரர் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:19:10 AM (IST)

சங்கரன்கோவில் அருகே காவலர் பயிற்சிப் பள்ளி நிர்வாகியைத் தாக்கியதாக ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே தனியார் காவலர் பயிற்சிப் பள்ளி நிர்வாகி வெங்கடேசன். இவரது பயிற்சிப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுரேஷ்குமார் என்பவரின் உறவினர் அங்கு பணம் செலுத்தி படித்து வந்தாராம்.இந்நிலையில் இருதினங்களுக்கு முன் சுரேஷ்குமார் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வந்தாராம். தனது உறவினர் செலுத்திய பணம் ரூ.50 ஆயிரத்தைக் கேட்டதாக தெரிகிறது. 

இதனால் அவருக்கும், நிர்வாகி வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றவே வெங்கடேசனை சுரேஷ்குமார் தாக்கினாராம்.இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீஸார்,  சுரேஷ்குமார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory