» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடுத்தடுத்து இரு மான்கள் உயிருடன் மீட்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:45:07 AM (IST)சுரண்டை அருகே அடுத்தடுத்து இரண்டு மான்களை சுரண்டை தீயனைப்பு நிலையத்தினர் மீட்டனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டியை சேர்ந்தவர் காசிப்பாண்டியன். இவருக்கு சொந்தமான தோட்டம் பாண்டியாபுரம் விலக்கு அருகே உள்ளது. இப்பகுதியில் 4வயது மதிக்கதக்க ஆண் மான் ஓன்று நாய்களால் விரட்டப்பட்டு காயமுற்று இருப்பதாக சுரண்டை தீயனைப்பு நிலையத்திற்க்கு தகவல் வந்தது. 

இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் பார்வதி நாதன் தலைமையில் ஏட்டுகள் ஜெயரத்தினகுமார். விஸ்வநாதன், செல்வம், வீரர்கள் மாரிமுத்து, ராஜா, சந்திரமோகன், சாமி, சுந்தர்ராஜன், மணிவன்னன் ஆகியோர் விரைந்து சென்று காயமுற்ற மானை மீட்டு சேர்ந்தமரம் கால்நடை மருத்துவமனையில் முதலுதவி செய்து கடையநல்லூர் வன ஊழியர்களிடம் ஓப்படைத்தனர்.

அதே போன்று வெள்ளாளன்குளம் அருகிலும் காயமுற்ற மானை உயிருடன் மீட்டு வன ஊழியர்களிடம் ஓப்படைத்தனர். ஏற்கனவே சுரண்டை பகுதியில் மான்கள் மற்றும் மயில்களை சுரண்டை தீயனைப்பு நிலையத்தினர் உயிருடன் மீட்டு வருவது குறிப்பிடதக்கது. இதற்காக பொதுமக்கள் தீயனைப்பு நிலையத்தினர்களை பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory