» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இருபது இடங்களில் கொள்ளையடித்தவர்கள் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:15:34 AM (IST)

கேரள மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்த செங்கோட்டையைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம், கொட்டியம், சக்திகுளங்கரை, கொட்டாரக்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பூட்டிக்கிடந்த வீடுகளை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள  டிவி, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை தொடர்பாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

கேரள மாநிலம் முழுவதும் உள்ள திருடர்களை எல்லாம் பிடித்து விசாரித்த நிலையிலும் எந்த முன்னேற்றமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால்; கொல்லம் போலீஸ் கமிஷனர் அஜிதாபேகம் உத்தரவின் பேரில் இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கேரள மாநிலம் மட்டுமன்றி தமிழகத்திலும் தீவரமாக விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசாருக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைத்த நிலையில் கேரள மாநிலத்திற்கு அருகில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சில திருடர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த அக்பர் ஜிலானி (28) ,அஜ்மீர் காஜா ஷரிப் (25) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கேரள மாநில தனிப்படை போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் இருவரும்  பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குளில் தொடர்பு உள்ளதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து 12 எல்.இ.டி. டிவிக்கள், 2 கம்ப்யூட்டர்கள், 10 லேப்டாப்கள், டிவிடி பிளேயர்கள், விலை உயர்ந்த வாட்சுகள், தங்கநகைகள் என ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தனிப்படை போலீசார் மீட்டனர்.

செங்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ள அக்பர் ஜிலானி, அஜ்மீர் காஜா ஷரீப் ஆகிய இருவரும் பல வருடங்களாக தொடர்ந்து இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் கொள்ளையடித்த பொருட்களை தமிழகம் முழுவதும் பல இடங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர்.ஆனாலும் இந்த இருவரும் இதுவரை எந்த சம்பவத்திலும் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. இப்போது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு பின் இவர்கள் இருவரும் 20 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory