» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:23:02 AM (IST)

தென்காசி அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக வேலை பார்த்தவர் ராஜூ (43). நெல்லை பேட்டை காந்திநகரைச் சேர்ந்த இவர் இலஞ்சியில் தங்கியிருந்து மாணவ, மாணவி களுக்கு டியூசன் எடுத்துள்ளார். அப்போது டியூசனுக்கு வரும் மாணவி களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனைடுத்து ஆசிரியர் ராஜூ பணி நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும் இதுகுறித்து குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்காததால் பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். ராஜூவை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். தென்காசி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த ராஜூவை தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory