» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் : ஆர்டிஓ விசாரணை

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:55:49 AM (IST)

தென்காசி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை அவரது கணவரும், உறவினர்களும் அடித்து கொலை செய்துள்ளனர் என அப்பெண்ணின் தந்தை கோட்டாட்சித் தலைவரிடம் புகார் கூறியுள்ளார்.

தென்காசி அருகே சீவநல்லூர்  பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பொக்லைன் இயந்திர டிரைவர். இவருக்கும் சாம்பவர்வடகரையைச் சேர்ந்த முருகையா மகள் இசக்கியம்மாள் ( 23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில்குமாரின் தம்பி மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து செந்தில்குமார் எனக்கு பின்னர் திருமணமான என் தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளது என கூறி தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனவேதனையடைந்த இசக்கியம்மாள் வீட்டு மாடிக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது சத்தம் ஏற்படவே செந்தில்குமார் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் விரைந்து சென்று இசக்கியம்மாளை தூக்கில் இருந்து விடுவித்து அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இசக்கியம்மாள் இறந்து விட்டார் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து இலத்தூர் காவல் நிலையத்தில் இசக்கியம்மாளின் தந்தை முருகையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 3 ஆண்டுகளில் இசக்கியம்மாள் இறந்ததால் தென்காசி கோட்டாட்சித் தலைவர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார்.; முருகையா தனது மகளை அவரது கணவரும், கணவரின் உறவினர்களும் சேர்ந்த அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என ஆர்.டி.ஓ.விடம் புகார் கூறினார்;. இது தொடர்பாக ஆர்.டி.ஓ.மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory