» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்திற்கு விவசாய இழப்பீடு எவ்வளவு ? : ஆட்சியர் தகவல்

செவ்வாய் 14, நவம்பர் 2017 12:16:05 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பயறு வகை பயிர்களுக்கு இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் மூலம்  காப்பீடு செய்த விவசாயிகளுக்காக ரூ.7.21 கோடி இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,திருநெல்வேலி மாவட்ட விவசாயி களுக்குப் பயிர்க்காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவான அளவில் வேளாண்மைத் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயிர்க்காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை பேரிடர்களான வறட்சி, வெள்ளம், பூச்சிநோய்த் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகள் பொருளாதார அடிப்படையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தங்களின் பயிர்க்காப்பீட்டுத் தொகையைச் செலுத்தி இத் திட்டத்தில் பங்குபெறலாம்.

2015-16 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் தேசிய வேளாண்மை பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உளுந்து, பாசிப்பயறு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்த 12 ஆயிரத்து 914 விவசாயிகளுக்கு ரூ.7.21 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கணக்கில் ஓரிரு நாள்களில் வரவு வைக்கப்படும்.

இதன்மூலம் குருவிகுளம் வட்டாரத்தில் 7,662 விவசாயிகளும், மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் 4,570 விவசாயிகளும், சங்கரன்கோவில் வட்டாரத்தில் 503 விவசாயிகளும், கீழப்பாவூர் வட்டாரத்தில் 97 விவசாயிகளும், மானூர் வட்டாரத்தில் 82 விவசாயிகளும்  பயன்பெ றுவார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory