» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள்தின விழா

செவ்வாய் 14, நவம்பர் 2017 2:35:12 PM (IST)
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாணவி சுபாஷினி வரவேற்றுப் பேசினார்.மாணவர்கள் செந்தூர் ஆறுமுகனார், ஆர்கேஷ், மாணவிகள் ஜனவர்ஷினி, பவதாரணி ஆகியோர் இறைவணக்கம் பாடினர்.  

தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் நித்யகல்யாணி, ஸ்ரீநிதி ஆகியோர் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றியும், குழந்தைகள் தினம் கொண்டாடுவது பற்றியும் பேசினர். மாணவிகள் ஷபினா, முருகசந்தியா, அமிஷா, காசிம் சுல்தானா ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகம், செய்கை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை மாணவர்கள் சுபாஷ சந்திரபோஸ், கவின், மாணவிகள் சௌமியா, பூஜாஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி சாஹானா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory