» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சை வேதிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

செவ்வாய் 14, நவம்பர் 2017 5:31:39 PM (IST)
தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் குழந்தைகள் தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளித் தாளாளர் செந்தில்பிரகாஷ், இயக்குநர் திலகவதி ஆகியோர் பங்கேற்று குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவை போற்றும் விதமாகவும் இவ்விழா நடைபெற்றது. விழாவில் மழலையர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் கலர் கலரான ஆடைகளை அணிந்துகொண்டு காட்சியளித்தனர். பின்னர் மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, வினாடிவினா, விவசாயம் அதை எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தேறின.

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் இறையாண்மையை எவ்வாறு காத்திடவேண்டும் என்றும் போர் இல்லா உலகம் எவ்வாறு படைத்திடல் வேண்டும் என்றும் நடித்து காட்டினர். அதனைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களாக நடித்து காட்டியது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. விழாவில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, மேலாளர் செல்வராஜ், ஒருங்கி ணைப்பாளர் முருகேஸ்வரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory