» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுகாதாரச்சான்று பெறுதற்கு 4500 ரூபாய் லஞ்சம் ? : ஆசிரியர்கள் அவதி

புதன் 15, நவம்பர் 2017 10:35:22 AM (IST)

சங்கரன்கோவில் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரச்சான்று வழங்குவதில் தாமதமாவதால் பள்ளி ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர் என்றும் எனவே சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சங்கரன் கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார சான்று வழங்குவதற்க்கு காலதாமதம் செய்வதுடன் அதிகமான கையூட்டு பெறுவதால் பள்ளிகள் சுகாதார சான்று பெறுவதில் கடும் சிக்கல்களை சந்திக்கின்றன.சங்கரன்கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் கீழப்பாவூர், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கரிவலம், செங்கோ ட்டை, மேல நீலித நல்லூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சமூதாய கூடங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத் துறையின் சார்பில் சுகாதார சான்று பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாக அரசு இதனை தீவிரமாக அமல் படுத்தியுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்வி கூடங்களுக்கு ஓவ்வொரு வருடமும் சுகாதாரச் சான்று பெற வலியுறுத்தியுள்ளது. இந் நிலையில் சங்கரன் கோவில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனருக்கான பெர்சனல் அசிஸ்டென்ட் இடம் காலியாகவே உள்ள நிலையில் கடந்த காலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பித்த சில நாட்களிலேயே சான்றுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டாண்டுகளாக இச் சான்றுகள் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு வருவதுடன் சான்றின் கட்டணமாக உரிய செல்லான் செலுத்தியும் சுமார் 4500ரூ வரை லஞ்சமாக வழங்க வலியுறுத்துகின்றனர். இதனால் கல்வி நிறுவனங்கள் கல்வித் துறையின் பிற சான்றுகளுக்கு விண்ணப்பிக்க கால தாமதமாவதுடன் ஆசிரியர்களும் பல முறை இணை இயக்குனர் அலுலகத்திற்க்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. 

கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று கல்வி துறையின் சான்றுகள் 3 வருடத்திற்கு ஒரு முறை பெறப்படும் நிலையில் சுகாதார மற்றும் தீயணைப்பு சான்றுகள் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியதால் ஆசிரியர்களின் பணி நேரங்கள் வீணாகின்றன. ஆகவே கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கப்படும் சுகாதார மற்றும் தீயணைப்பு சான்றுகளை லஞ்சம் வழங்காமல் உடனடியாக கிடைக்கவும் அதனை 3வருடத்திற்கு ஓருமுறை வாங்கவும் சங்கரன் கோவில் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்க்கு நிரந்தர பெர்சனல் அசிஸ்டென்ட் நியமிக்கவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory